/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசியக் கொடி ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசியக் கொடி ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 15, 2024 03:58 AM

தேனி : தேனி தபால் கோட்டத்தின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பிரதமர் மோடியின் இல்லந்தோறும் மூவர்ணக்கொடி 2024' திட்டத்தின் கீழ் ஆக., 1 முதல் அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மக்களிடையே தேசப்பற்று உணர்வை வளர்த்திடும் நோக்கத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் தேனி தலைமை தபால் நிலையத்தில் துவங்கியது.
தேனி கோட்டக் கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் தேனி பெரியகுளம் ரோடு ரயில்வே கேட், நேருசிலை வரை சென்று மீண்டும் அதேவழியில் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தபால் கோட்ட வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், அலுவலர்கள் செய்திருந்தனர்.