/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் புதிய வருவாய் கிராமங்கள் உருவாகிறது: மக்கள் தொகை, சர்வே கணக்கிடும் பணி தீவிரம்
/
மாவட்டத்தில் புதிய வருவாய் கிராமங்கள் உருவாகிறது: மக்கள் தொகை, சர்வே கணக்கிடும் பணி தீவிரம்
மாவட்டத்தில் புதிய வருவாய் கிராமங்கள் உருவாகிறது: மக்கள் தொகை, சர்வே கணக்கிடும் பணி தீவிரம்
மாவட்டத்தில் புதிய வருவாய் கிராமங்கள் உருவாகிறது: மக்கள் தொகை, சர்வே கணக்கிடும் பணி தீவிரம்
ADDED : ஆக 01, 2024 05:44 AM
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் என வருவாய் கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 5 தாலுகா அலுவலகங்கள், 113 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த வருவாய் கிராமங்கள் தேனி மாவட்டம் உருவாகுவற்கு முன் உருவானவை. அன்றைய மக்கள் தொகை அடிப்படையில் கிராமங்கள் வரையறை செய்யப்பட்டன.
ஆனால், இன்று மக்கட்தொகை அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட இதர சான்றிழதல்கள் வி.ஏ.ஓ.,க்கள் ஒப்புதல் பெற்று வழங்கப்படுகிறது.
அதே போல் நிலம், காலியிடம் சர்வே பணி, சட்ட ஒழுங்கு, அடையாளம் தெரியாத நபர்கள் மரணம், நோய் தொற்று பரவல் உள்ளிட்டவற்றை ( வி.ஏ.ஓ.,ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக அல்லிநகரம் வருவாய் கிராமத்தில் தேனி நகராட்சி 33 வார்டுகள் உள்ளன.
இங்குள்ள மக்கள் சான்று கோரிவிண்ணப்பித்தால் அவர் எங்குள்ளார், யார் என்ற முழுவிபரம் வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்களுக்கு விற்கு தெரிய வாய்ப்பில்லை. வீரபாண்டி வருவாய் கிராமத்தில் பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி என இரு பேரூராட்சிகள் உள்ளன. கொடுவிலார்பட்டி வருவாய் கிராமத்தில் 6 ஊராட்சிகளுக்கு மேல் உள்ளன.
அதே போல் திருமலாபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் சில பரப்பளவில் பெரியதாகவும், சில மக்கள் தொகை அதிகமாக உள்ளது.
மாவட்டத்தில் சில வருவாய் கிராமங்கள் அளவில் பெரியதாவும், மக்கள் தொகை அதிகமாகவும் காணப்படுகிறது.
எனவே, வி.ஏ.ஓ.,க்கள் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர் தாமதம் நிலவுகிறது. அதே போல் பெரிய கிராமத்தில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்னை நிலவும் போது அனைத்து இடங்களுக்கும் வி.ஏ.ஓ.,க்கள் சென்று ஆய்வு செய்து புகார் தெரிவிப்பது, அறிக்கை அளிப்பதில் பிரச்னை நிலவுகிறது.
இந்நிலையில் அரசு உத்தரவில் பெரிய வருவாய் கிராமங்களை மக்கள் தொகை, சர்வே எண்கள் உள்ளிட்டவற்றை கணக்கிடும் பணியை வருவாய்ததுறையினர் துவங்கி உள்ளனர். விரைவில் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை உயர உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.