/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை சாகுபடியில்... பாதிப்பில்லை; விலை அதிகரிக்கும் வாய்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : மார் 03, 2025 06:40 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக ஏற்படும் திடீர் சீதோஷ்ண நிலை மாற்றம் திராட்சை சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், விலை உயர்ந்துள்ளதால் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது. திராட்சைக்கு அதிக மழையும், அதிக பனி, குளிர் சீதோஷ்ண நிலை ஆகாது. மிதமான மழை, லேசான சாரல் , மித வெப்பம் தேவைப்படும். அக்டோபரில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் திராட்சை கடுமையாக பாதிப்புள்ளாகும். குறிப்பாக செவட்டை, அடிச் சாம்பல் நோய்கள் பிரதானமாகும். பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச்சில் கடும் வெப்பம் நிலவும். மழை இருக்காது.
காற்றில் ஈரப்பதம் மிக குறைவாக இருக்கும். காற்று வறண்டு இருக்கும்.
ஆனால், கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கருமேகம் சூழ்ந்திருந்தாலும் பாதிப்பு இல்லை. பனி இல்லாமல் குளிர் நிலவுகிறது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக உள்ளது. இந்த திடீர் சீதோஷ்ண நிலை மாற்றத்தினால், திராட்சைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறியதாவது: சீதோஷ்ண மாற்றத்தால் திராட்சைக்கு பாதிப்பு ஏற்படாது.
திடீர் சாரல் மழை திராட்சைக்கு நல்லது. கோடையில் மழை கிடைப்பது வரப்பிரசாதம். இதனால் மகசூல் நன்றாக கிடைக்கும். இந்த சீசனில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 30 சதவீதம் விதையில்லா திராட்சை மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாசிக்கில் இருந்து வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும், தமிழகத்திற்கான வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் பன்னீர் திராட்சை விலை கிலோ ரூ.60 க்கு மேல் கிடைக்கிறது. இன்னமும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே இப்போதைக்கு பிரச்னையில்லை. விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளதுஎன்றார்.