/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு உதவ தொடர்பு எண்கள் அறிவிப்பு
/
மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு உதவ தொடர்பு எண்கள் அறிவிப்பு
மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு உதவ தொடர்பு எண்கள் அறிவிப்பு
மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு உதவ தொடர்பு எண்கள் அறிவிப்பு
ADDED : ஏப் 01, 2024 06:41 AM
தேனி : லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விடையளிக்க கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் சந்தேகங்களை 95438 13074, 90474 52274 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சைகை மொழிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்க உள்ளனர். வாக்களிப்பது, அருகில் உள்ள ஓட்டுச்சாவடி, அங்குள்ள வசதிகள் பற்றி தெரிவிக்கப்படும்.