நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கம்பம் நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் ஜீவன் 36. தனது நண்பர் குருத்தமாயனுடன் டூவீலரில் கூடலுாரில் இருந்து கம்பம் நோக்கி சென்றார். எதிரே கேரளா நோக்கிச் சென்ற மினி லாரி நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜீவன் பலியானார். இவரது நண்பர் குருத்தமாயன் 42, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மினி லாரி டிரைவர் காரைக்காலைச் சேர்ந்த கலைவாணனை 29, கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி கைது செய்தார்.