/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காணை நோய் தடுப்பூசி திட்டத்தில் ஒரு லட்சம் டோஸ்; தேனிக்கு அனுமதி
/
காணை நோய் தடுப்பூசி திட்டத்தில் ஒரு லட்சம் டோஸ்; தேனிக்கு அனுமதி
காணை நோய் தடுப்பூசி திட்டத்தில் ஒரு லட்சம் டோஸ்; தேனிக்கு அனுமதி
காணை நோய் தடுப்பூசி திட்டத்தில் ஒரு லட்சம் டோஸ்; தேனிக்கு அனுமதி
ADDED : மே 01, 2024 08:08 AM
கம்பம் : கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி செலுத்த ஒரு லட்சத்து 5 ஆயிரம் டோஸ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்., கால்நடைகளுக்கு காணை நோய் தாக்குதல் இருக்கும். இந்த நோய் தாக்கினால் கால்நடைகள் தீவனம் உண்ணாது. தண்ணீர் சரிவர குடிக்காது. பால் கறப்பது குறையும். கால் குழம்பு, வாய் போன்ற பகுதிகளில் புண் ஏற்படும். காணை நோய் தடுப்பூசி மத்திய அரசின் 20 ஆண்டுகள் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு இரண்டு முறை மார்ச் மற்றும் செப்.,போடப்பட்டது. தொடர்ந்து 19 ஆண்டுகள் போடப்பட்டது. கடந்த 2020 ல் அந்த திட்டம் முடிவிற்கு வந்தது.
அதன்பின்னர் 2021 ல் மத்திய அரசு மீண்டும் சிறப்பு திட்டத்தை அறிவித்தது அதன்படி 2 ஆண்டுகளாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் தமிழக கேரள எல்லையோரம் உள்ள கன்றுகளுக்கு காணை நோய் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் கம்பம், மாலையம்மாள்புரம், அண்ணாபுரம், சாமாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணை நோய் பரவியது. தனியார் மருந்தகங்களில் தடுப்பூசி வாங்கி போட்டனர். ஒரளவிற்கு கட்டுக்குள் வந்தது. செப். முதல் வாரம் தடுப்பூசி செலுத்தினால் தான் 40 நாட்களுக்கு பின் பயன் கிடைக்கும், எனவே தான் அக்டோபரில் தாக்க கூடிய காணை நோயை எதிர்கொள்ள செப். முதல் தேதி தடுப்பூசி போடுவார்கள்.
தற்போது ஒரு லட்சத்து 5 ஆயிரம் டோஸ்கள் காணை நோய் தடுப்பூசிகள் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இந்தாண்டு குறிப்பிட்ட காலத்தில் காணை நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.