/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தினகரனை ஆதரித்து ஓ.பி.எஸ்., அண்ணாமலை பிரசாரத்திற்கு ஏற்பாடு
/
தினகரனை ஆதரித்து ஓ.பி.எஸ்., அண்ணாமலை பிரசாரத்திற்கு ஏற்பாடு
தினகரனை ஆதரித்து ஓ.பி.எஸ்., அண்ணாமலை பிரசாரத்திற்கு ஏற்பாடு
தினகரனை ஆதரித்து ஓ.பி.எஸ்., அண்ணாமலை பிரசாரத்திற்கு ஏற்பாடு
ADDED : ஏப் 12, 2024 06:17 AM
தேனி: தேனியில் போட்டியிட்டுள்ள அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனை ஆதரித்து ஓ.பி.எஸ்., அண்ணாமலை பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அ.ம.மு.க., சார்பில் தேனியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த கோவையில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தேனியில் தினகரனை ஆதரித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இவர்கள் பிரசாரம் செய்ய உள்ள இடங்கள், பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் அ.ம.மு.க., பா.ஜ., வினர், ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.