/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயல்பு நிலைக்கு திரும்பிய படையப்பா
/
இயல்பு நிலைக்கு திரும்பிய படையப்பா
ADDED : ஏப் 11, 2024 06:39 AM

மூணாறு : சுபாவம் மாறிய இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வழக்கப்படி படையப்பா ரோடுகளில் வலம் வருகிறது.
மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். இந்த யானை தீவனம் தேடி ரோடுகளிலும், மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளிலும் கூடுதலாக வலம் வரும். மிகவும் சாதுவான படையப்பா கடந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் மதம் பிடித்த அறிகுறியுடன் ஆக்ரோஷமாக நடமாடியது. அப்போது வாகனங்கள் உள்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியதால் மக்கள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது.
யானையை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கண்காணித்த வனத்துறையினர் யானை சாந்தமாகி விட்டதாக கூறி கண்காணிப்பை கைவிட்டனர். படையப்பா சுபாவம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வழக்கப்படி ரோடுகளில் நடமாடி வருகிறது. இருப்பினும் படையப்பா மீதான அச்சம் மக்கள் இடையே விலகவில்லை.

