/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கபடிபோட்டியில் பழனியப்பா பள்ளி கோட்டூர் அரசு பள்ளி சாதனை
/
கபடிபோட்டியில் பழனியப்பா பள்ளி கோட்டூர் அரசு பள்ளி சாதனை
கபடிபோட்டியில் பழனியப்பா பள்ளி கோட்டூர் அரசு பள்ளி சாதனை
கபடிபோட்டியில் பழனியப்பா பள்ளி கோட்டூர் அரசு பள்ளி சாதனை
ADDED : ஆக 04, 2024 06:16 AM
தேனி : பள்ளி கல்வி துறை சார்பில் நடத்தப்படும் தேனி குறுவட்ட கபடி போட்டியில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
தேனி குறுவட்ட போட்டிகளில் மாணவர்களுக்கான கபடிப் போட்டிகளை தேனி எடமால் தெரு நாடார் சரஸ்வதி வித்யாலயா பள்ளி சார்பில் நடத்தப்படுகின்றன. நேற்று முத்துத்தேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை மெட்ரிக் பள்ளியில் கபடிப் போட்டிகள் நடந்தன.
14, 17 வயதுப் பிரிவுகளுக்கான போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஸ்ரீரெங்கபுரம் எஸ்.ஆர்.ஜி., அரசு உயர்நிலைப்பள்ளி அணி 2ம் இடம் பெற்றனர்.
தர்மாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் பிடிததனர். 19 வயதுப் பிரிவில் கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
தேனி கமமவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம் பிடித்தது.
போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் மூவேந்தன், பிற பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். அடுத்த போட்டிகள் ஆக., 9ல் துவங்க உள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.