/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவனிப்பு சென்றடையாததால் யாரை நம்புவது என கட்சிகள் குழப்பம்
/
கவனிப்பு சென்றடையாததால் யாரை நம்புவது என கட்சிகள் குழப்பம்
கவனிப்பு சென்றடையாததால் யாரை நம்புவது என கட்சிகள் குழப்பம்
கவனிப்பு சென்றடையாததால் யாரை நம்புவது என கட்சிகள் குழப்பம்
ADDED : ஏப் 04, 2024 11:48 PM
கம்பம் : கட்சி கவனிப்பு முறையாக சென்றடையாததால் யாரை நம்புவது என முக்கிய கட்சிகள் குழப்பம் அடைந்துளளனர்.
தேனி தொகுதியில் தி.மு.க.,வில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க.,வில் நாராயணசாமி, அ.ம.மு.க.,வில் தினகரன் நா.த. சார்பில் மதன் போட்டியிடுகின்றனர். தொகுதியில் தினகரன் போட்டியிடுகிறார் என்றதும் பணப் பட்டுவாடா தாராளமாகும் என்றும், தி.மு.க. ஆளும் கட்சி என்பதால் தி.மு.க.,வும் தாராளம் காட்டும், அ.தி.மு.க.வில் வசதி படைத்த வேட்பாளர் அவர் தனது பலத்தை காட்டுவார் என்ற பேச்சு தொகுதி முழுவதும் பரவியது. எனவே, தேர்தலில் பண மழை பொழியும் என எதிர்பார்த்தனர்.
தி.மு.க. அ.தி.மு.க., சார்பில் கட்சி நிர்வாகிகள் கவனிக்கப்பட்டனர். பூத் கமிட்டியினருக்கு தனி கவனிப்பு.
இதில் சில நிர்வாகிகள் பகிர்ந்தளிப்பில் நேர்மையாக இல்லை எனவும், பல இடங்களில் பூத் கமிட்டிக்கு கொடுத்ததிலும் கை வைத்ததாக புகார் கூறுகின்றனர். இப் புகார்கள் கட்சி தலைமை வரை சென்றது. குறைந்த பட்டுவாடாவிற்கே இப்படி என்றால், வாக்காளர்களுக்கு பட்டுவாடாவை சரியாக செய்வார்களா என்ற சந்தேகம் கட்சி தலைமைக்கு எழுந்துள்ளது.
எனவே, எப்படி பட்டுவாடா மேற்கொள்வது என ஆலோசனை நடைபெறுகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பட்டுவாடா பொறுப்பு வழங்கினால் உரியவர்களுக்கு செல்லுமா என கருதுகின்றனர். எனவே ,பட்டுவாடாவை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.
அ.ம.மு.க., சார்பில் கவனிப்பு இல்லை. இன்று, நாளைக்கு என நாட்களை தள்ளுகின்றனர். இது கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

