/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அறுவடை முடிந்த வயல்களில் இரை தேடி வரும் மயில்கள்
/
அறுவடை முடிந்த வயல்களில் இரை தேடி வரும் மயில்கள்
ADDED : பிப் 10, 2025 05:06 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அறுவடை முடிந்த நெல், சிறு தானிய வயல்களில் சிந்திய தானியங்களை உணவாக்க மயில்கள் வந்து செல்கின்றன.
இப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையை சார்ந்து உள்ள புள்ளிமான்கோம்பை, கணவாய் மலைப் பகுதி, நக்கலக்கரடு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. மலைப் பகுதியை சார்ந்துள்ள விவசாய நிலங்களில் காலை, மாலை நேரங்களில் மயில்கள் இரை தேடி, வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் தற்போது இப்பகுதி வயல்களில் நெல், சிறு தானியங்கள் அறுவடை முடிந்துள்ளன. அறுவடை முடிந்த வயல்களில் சிந்திய தானியங்களை தேடி மலைப் பகுதியில் இருந்து மயில்கள் அதிக அளவில் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. வயல்வெளிகளுக்கு வந்து செல்லும் மயில்களின் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.