/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி
/
டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி
டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி
டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி
ADDED : ஏப் 06, 2024 04:39 AM
பெரியகுளம் : பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு தினமும் 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். சோத்துப்பாறை அணை தண்ணீர் குழாய் தொட்டிக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்து தென்கரை, வடகரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அனைத்து வார்டுகளுக்கும் வினியோகிக்கப்பட வேண்டும். 30 வது வார்டுக்கு உட்பட்ட காந்திசிலை பகுதி ,கம்பம் மெயின் ரோடு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு தினமும் நகராட்சி 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்தது. கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வெகுதொலைவில் இருந்து குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில்: குடிநீர் டேங்கர் லாரி தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 'எப்.சி' சான்றிதழ் பெற சென்று இருந்தது. இன்று முதல் (ஏப்.6) அந்த பகுதி மக்களுக்கு டேங்கர் லாரியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
பேரிஜம் ஏரியில் நீர் ஆதாரம் போதிய அளவு உள்ளதால் கோடையில் பெரியகுளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள பழைய குடிநீர் இணைப்புக்கு புதிய இணைப்புகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

