/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்வரத்து ஓடையில் காற்றாலை மின் கம்பங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
நீர்வரத்து ஓடையில் காற்றாலை மின் கம்பங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
நீர்வரத்து ஓடையில் காற்றாலை மின் கம்பங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
நீர்வரத்து ஓடையில் காற்றாலை மின் கம்பங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:11 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே இராமலிங்கபுரத்தில் நீர்வரத்து ஓடையில் தனியார் காற்றாலை மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம், கணேசபுரம் அருகே தனியார் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை எரதிமக்காள்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்மாற்றி மூலம் மின்சார டவர்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கணேசபுரம் புதுக்குளத்தில் துவங்கி ராமலிங்காபுரம் நீர்வரத்து ஓடையில் பல இடங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஓடையில் அதிக நீர் வரத்து ஏற்படும்போது மின் கம்பங்கள் சாய்ந்து ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், இதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி ராமலிங்கபுரம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மூலம் அனுமதி பெற்று இப் பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி.உசிலம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் துரைக்கண்ணு கூறியதாவது:
குளங்கள் நீர் வரத்து ஓடைகளில் மின் கம்பங்கள் அமைக்க எப்படி அனுமதி கொடுத்தனர் என தெரியவில்லை.
இதுகுறித்து தமிழக முதல்வர் தனி பிரிவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜி.உசிலம்பட்டி ஊராட்சியில் நீர்வரத்து ஓடையில் மின்கம்பங்கள் அமைக்க தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.