/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
/
பெரியகுளம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
பெரியகுளம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
பெரியகுளம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
ADDED : மார் 09, 2025 03:55 AM

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு பிப்ரவரி சம்பளம் வழங்காததை கண்டித்து நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் நிரந்தரமாக தூய்மை பணியாளர்கள் 10 பேர் மட்டுமே உள்ளனர்.
சுகாதார பணிக்காக சங்கர் நிறுவனம் மேற்பார்வையில் 79 தற்காலிக சுகாதாரப்பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.
தினமும் 13 டன்கள் குப்பை சேகரிப்பு கணக்கிட்டு ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.1.60 கோடி வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிறுவனம் சுகாதார பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, காப்பீடு கணக்கு பிடித்தம் போக தினமும் ரூ.440 சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.
தற்போது கடந்த பிப்ரவரி சம்பளம் மார்ச் 8 வரை வழங்கவில்லை. இந்திய குடியரசு தொழிலாளர்தொழில் சங்க மாநில துணை செயலாளர் ஜெகநாதன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நகரில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன்னரே சம்பளம் வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த தினமும் ரூ.649 வீதம் கணக்கிட்டு விரைவில் சம்பளம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி, காப்பீடு கணக்குகள் விபரங்களை வழங்கவில்லை. விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில்,' வங்கி விடுமுறையால் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கிடைக்காமல் உள்ளது.
மார்ச் 10 மாலைக்குள் சம்பளம் கிடைக்கும்' என்றார்.