/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்
அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்
அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்
ADDED : ஜூலை 26, 2024 12:16 AM

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளன.
இம் மருத்துவமனைக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டம், கேரளாவில் இருந்தும் அதிகளவில் நோயாளிகள் வருகின்றனர்.
மருத்துவமனை நோயாளிகள், உறவினர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மருத்துவமனை எதிரே செயல்படும் கடைகளில் வாங்குகினறனர். இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவமனைக்குள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும், சிலர் இந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் உணவு வாங்கி செல்கின்றனர்.
இதனை மருத்துவமனை பணியாளர்கள் தடுத்தால் அவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பணியாளர்களும் இதனை கண்டு கொள்வதில்லை.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பை சேகராமாகின்றன.
மருத்துவமனைக்கு வெளியே உணவுகள் சுகாதரமின்றி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை சிலர் கையை பிடித்து இழுப்பதும் தொடர்கிறது.
இதனால் பொருட்கள் வாங்க செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், மருத்துவக்கல்லுாரி பகுதியில் சுகாதாரமான உணவுகள் கிடைப்பதை கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.