நுரையீரல் புரையால் வாலிபர் பலி
தேனி: தேனி பாரஸ்ட் ரோடு சீனிவாசன் 32. திருமணம் ஆகவில்லை. வேலைக்கு செல்லாமல் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்க நிலையில் இருந்தார். இவரை மீட்ட இவரது தாயார் கலாவதி, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். நுரையீரலில் புரை ஏறி வாயில் நுரை தள்ளி மயக்கநிலை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் மாயம்
தேனி: பழனிசெட்டிபட்டி நாகம்மாள் கோயில் தெரு மாரிச்சாமி 78. அதே பகுதியில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. தெரிந்த இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அவரது மகன் முருகேசன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்
தேனி: பழனிசெட்டிபட்டி மணிமேகலை. பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது 17 வயது மகள் தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். அருகில் உள்ளவர்களின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. தெரிந்த இடங்கள், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மணிமேகலை புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பதுக்கி விற்ற தந்தை, மகன் கைது
தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையிலான போலீசார் மாரியம்மன்கோவில்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது மாரியம்மன் கோவில்பட்டி ரோட்டில் தனியார் பள்ளி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி ஜெகநாதபுரம் முத்துராஜின் 60, பெட்டிக் கடையில் சோதனை செய்தனர். அங்கு ரூ.18,622 மதிப்புள்ள 15.85 கிலோ மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றினர். முத்துராஜ், அவரது மகன் சரவணக்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.