ADDED : செப் 04, 2024 01:13 AM
தேவதானப்பட்டி : சொத்து பிரச்னைக்காக மாமியார் ரோஹிணியை மருமகள் ஐஸ்வர்யா பிடித்துக்கொள்ள மகன் ஆனந்தகுமார் பன்னருவாளால் வெட்டினார்.
பெரியகுளம் ஒன்றியம், ஜி.கல்லுப்பட்டி அருகே கோட்டார்பட்டியைச் சேர்ந்த சுருளிக்காமு மனைவி ரோஹிணி 67.
இவருக்கு மஞ்சளாறு பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. இவரது மகள் மரகதம், மகன் ஆனந்தகுமார் இருவரும் தென்னந்தோப்பு தங்களுக்கு வேண்டும் என ரோஹிணியை வற்புறுத்தினர். தோட்டத்தில் இருந்த ரோஹிணியை, ஆனந்தகுமார் மனைவி ஐஸ்வர்யா பிடித்துக்கொள்ள, ஆனந்தகுமார் தாயை பார்த்து உனக்கு எதுக்கு சொத்து, தோட்டத்தை விட்டு சென்றுவிடு என பன்னருவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். சகோதரி மரகதம் அலைபேசியை பறித்துக் கொண்டார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ரோஹிணி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் ஆனந்தகுமார், ஜஸ்வர்யா, உறவினர்கள்
ரவி, சுதாகர், பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்தனர்.