ADDED : ஆக 13, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி பிட் 1 வருவாய் கிராமம் உட்கடை மஞ்சளாறு கிராமத்தில் நாளை (ஆக.,14) மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பெரியகுளம் தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, விபத்து நிவாரணம், வேளாண், போக்குவரத்து துறை உள்ளிட்ட அரசு துறைகள் தொடர்பான மனுக்கள் வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

