/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இறந்தவர்களை அடையாளம் காண பொதுமக்களும் ... உதவலாமேl கைரேகை பதிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்
/
இறந்தவர்களை அடையாளம் காண பொதுமக்களும் ... உதவலாமேl கைரேகை பதிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்
இறந்தவர்களை அடையாளம் காண பொதுமக்களும் ... உதவலாமேl கைரேகை பதிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்
இறந்தவர்களை அடையாளம் காண பொதுமக்களும் ... உதவலாமேl கைரேகை பதிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்
ADDED : மே 28, 2024 03:31 AM
தேனி : 'மாவட்டத்தில் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை பயோ மெட்ரிக் மூலம் விரல் பதிவு செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, பொதுமக்கள் போலீசாருக்கு உதவிட வேண்டும்.' என தேனி மாவட்ட கைரேகை பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் 31 போலீஸ் ஸ்டேஷன்கள், 5 அனைத்து மகளிர் ஸ்டேஷன்கள், டிராபிக் ஸ்டேஷன்கள் 4, ஒரு சைபர் கிரைம் ஸ்டேஷன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன், தேனி உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கத்துறை யூனிட் 2 என 44 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் குற்றங்களின் தன்மைகளுக்கு ஏற்ப விசாரணை நடக்கின்றன. அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களின் கட்டுப்பாட்டில் தற்கொலை, விபத்து, நீர் நிலைகளில் பலியானோர் ஆகியோரின் உடல்களை மீட்டு விசாரிக்கின்றனர். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் மாதந்தோறும் மூன்று நான்கு அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் மீட்கப்படுகின்றன. இவை தேனி மருத்துவக் கல்லுாரியில் அடையாளம் காணாமல் 20க்கும் மேற்பட்ட உடல்கள் பலமாதங்களாக பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பிட்ட காலம் முடிந்த பின் அரசே தகனம் செய்கிறது. இதில் அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்வது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதுகுறித்து கைரேகை பிரிவு போலீசார் கூறுகையில், 'நீர்நிலைகளில் ஒதுங்கும் உடல், ஒதுக்குப்புறமாக கரடு, காடுகளில் தற்கொலை செய்பவர்களின் உடல்களின் பெயர், விபரம் அறிய பொது மக்கள் போலீசாருக்கு உதவ முன்வர வேண்டும். அடையாளம் தெரியாத உடல் கிடப்பதை அறிந்தால் முதலில் வி.ஏ.ஓ., போலீசாருக்கு தகவல் தெரிவித்து அருகில் உள்ள இ-சேவை மைய உதவியுடன் பயோ மெட்ரிக் கருவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் கைரேகை பதிவு செய்தால் இறந்தவரின் ஆதார் மூலம் முழு விபரம் கண்டுபிடித்து விடலாம். அதனை வைத்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து விடலாம். இது இறந்தவரின் குடும்பத்திற்கு செய்யும் பெரிய உதவியாகும். மேலும் போலீசாருக்கும் பெரிதான உதவியாகும். பொதுமக்கள் உதவுவது குறித்து போலீசார் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.', என்றனர்.