/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடிந்து விழும் நிலையில் பொதுக்கழிப்பறை
/
இடிந்து விழும் நிலையில் பொதுக்கழிப்பறை
ADDED : மே 26, 2024 04:46 AM

ஆண்டிபட்டி: புள்ளிமான்கோம்பை ஊராட்சி தர்மத்துப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடில்லாத பொதுக்கழிப்பறையை அப்புறப்படுத்தி புதிய கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் பல கிராமங்களில் இருந்து கர்ப்பிணிகள் உட்பட பலர் வந்து செல்கின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள பொதுக்கழிப்பறை சேதம் அடைந்து பயன்படுத்த முடியவில்லை. பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பராமரிப்பின்றி தற்போது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: கழிப்பறை சீரமைக்க முடியாத அளவிற்கு சேதம் அடைந்து விட்டது. புதிய கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தபின் பழுதடைந்த கழிப்பறை இடித்து அப்புறப்படுத்தப்படும் என்றனர்.