ADDED : ஜூலை 04, 2024 02:05 AM
தேனி: தேனியில் தாய், தந்தையை இழந்த 10 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த பூதிப்புரத்தை சேர்ந்த பரமேஸ்வரனை 32, தேனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகேயுள்ள கிராமத்தில் குழந்தைகள் இல்லம் உள்ளது. இதன் மேலாளர் அங்கையர்கன்னி 45. இவர் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், ஓராண்டாக எங்கள் இல்லத்தில் 10 வயது சிறுமி தங்கி, அருகில் இயங்கும் பள்ளியில் படித்தார். தாத்தா கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார். கடந்த ஏப்ரலில் கோடை விடுமுறைக்கு சிறுமியை தாத்தா பூதிப்புரத்திற்கு அழைத்து சென்றார். அங்கு ஒன்றரை மாதங்கள் தங்கி, விடுமுறைக்கு பின் தாத்தா, சிறுமியை இல்லத்தில் விட்டுச் சென்றார். 10 வயது சிறுமி அமைதியாக, வழக்கமான சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்தார். பள்ளிக்கு சென்ற சிறுமியிடம், ஆசிரியை விசாரித்தார். அவரிடம், விடுமுறையில் பூதிப்புரத்தில் தங்கிய போது உறவினர் பரமேஸ்வரன் 32,ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது குறித்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா, போலீசார் பரமேஸ்வரனை போக்சோவில் கைது செய்தனர்.