/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறு அருகே கேப் ரோட்டில் சீரமைப்பு பணி தீவிரம்
/
மூணாறு அருகே கேப் ரோட்டில் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஜூலை 25, 2024 05:06 AM

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணி நடக்கிறது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்டது.
அப்பணிகளின்போது மூணாறு அருகே கேப் ரோட்டில் விதி மீறி பாறைகள் உடைக்கப்பட்டதால், அங்கு அடிக்கடி மண் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை 16ல் பெய்த பலத்த மழையில் கேப் ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டது.
அப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகம் கேப் ரோடு வழியாக போக்குவரத்தை தடை விதித்தது.மாற்றுவழி: மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி வழியாக பூப்பாறை சென்று தேனி உள்பட பிற பகுதிகளுக்கு மாற்று வழியில் வாகனங்கள் சென்று வருகின்றன.
சீரமைப்பு: இந்நிலையில் கேப் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணி நடக்கிறது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் முதல் வாளரா வரை ரோடு மலை மீது கடந்து செல்வதால் இருபுறமும் மரங்கள் ஆபத்தாக உள்ளன.
அதனால் அந்த வழியில் சுற்றுலா பயணிகள் மற்றும் தேவையற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அந்த உத்தரவை நீக்கி அனைத்து வாகனங்கள் செல்ல அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.