/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் பழைய பாலம் புதுப்பிப்பு
/
வைகை அணையில் பழைய பாலம் புதுப்பிப்பு
ADDED : ஜூன் 27, 2024 05:31 AM

ஆண்டிபட்டி, : வைகை அணையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் நெடுஞ்சாலை துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
வைகை அணை கட்டப்பட்ட போது, ஆண்டிபட்டி - பெரியகுளம் ரோட்டில் வைகை ஆற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்பட்டது.
பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளை கடந்த நிலையில் தடுப்பு சுவர்கள் உயரம் குறைவாகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.
பாலத்தின் இருபுறமும் புதிய தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு சேதம் அடைந்த பகுதிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி - பெரியகுளம் ரோட்டில் சென்று வரும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குறுகலான பழைய பாலத்தின் அருகே பெரிய அளவில் புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
தற்போது இரு பாலங்களும் பயன்பாட்டில் உள்ளது. பாலங்கள் தனித்தனியாக வாகனங்களுக்கு ஒரு வழிப் பாதையாக பயன்படுத்தப்படுகிறது.