/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் துர்நாற்றத்தில் தவிப்பு கோவிந்தநகரத்தில் பொதுமக்கள் அவதி
/
மருத்துவக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் துர்நாற்றத்தில் தவிப்பு கோவிந்தநகரத்தில் பொதுமக்கள் அவதி
மருத்துவக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் துர்நாற்றத்தில் தவிப்பு கோவிந்தநகரத்தில் பொதுமக்கள் அவதி
மருத்துவக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் துர்நாற்றத்தில் தவிப்பு கோவிந்தநகரத்தில் பொதுமக்கள் அவதி
ADDED : ஆக 18, 2024 07:12 AM

தேனி : தேனி ஒன்றியம், கோவிந்தநகரம் ஊராட்சி பகுதிகளில் மர்ம நபர்கள் தொடர்ந்து மருத்துவக் கழிவுகளை கொட்டி தீ வைத்து செல்வதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.
கோவிந்தநகரம் ஊராட்சியில் 11 வார்டுகள் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மூலவைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விவசாய கிராமம் ஆகும்.
இக் கிராமத்தில் இருந்து ஜங்கால்பட்டி செல்லும் ரோட்டில் வண்ணான்குளம், புதுக்குளம் கண்மாய்கள் அமைந்துள்ளன. இந்த குளக்கரைகளில் இரவில் வரும் சில சமூக விரோதிகள் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கழிவுகளை முதலில் கொட்டி விட்டு அடுத்த நாட்களில் தீ வைத்து செல்கின்றனர். இதுபோல் இரு முறைக்கு மேல் தொடர்ச்சியாக கழிவுகளை கொட்டி தீ வைத்துள்ளனர். மோசமான மருத்துவ கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுபுகை துர்நாற்றத்துடன் கிராமத்தில் பரவுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமம் நிலவுகிறது. பிற இடங்களில் இருந்து எடுத்து வந்து இந்த பகுதிகளில் மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்து விழும் அபாயத்தில்கட்டடம்
நாகராஜன், கோவிந்தநகரம்.
கோவிந்தநகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள பழைய கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
எனவே இக் கட்டடத்தை பயன்படுத்த வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டட பணிகளை விரைந்து துவங்க வேண்டும். 'ஜல்ஜீவன்' திட்டத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் குடிநீர் வழங்குவதில்லை. இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை
லட்சுமணன், கோவிந்தநகரம்.இங்கு தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.
இதனால் மாலையில் மாணவர்கள் டியூசன் செல்வதற்கும், டூவீலர்கள்செல்பவர்களும் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.