/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த தடுப்புச் சுவரால் விபத்து ஏற்படும் அபாயம்
/
சேதமடைந்த தடுப்புச் சுவரால் விபத்து ஏற்படும் அபாயம்
சேதமடைந்த தடுப்புச் சுவரால் விபத்து ஏற்படும் அபாயம்
சேதமடைந்த தடுப்புச் சுவரால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மே 07, 2024 06:09 AM

போடி: உப்புக்கோட்டை வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து முல்லை ஆற்றிற்கு செல்லும் பாதையில் சிறு பால தடுப்புச் சுவர் சேதம் அடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது.
போடி ஒன்றியம், உப்புக்கோட்டை ஊராட்சி வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அருகே உள்ள முல்லை ஆற்றிற்கு இந்த ரோட்டின் வழியாக தினந்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
பாதையில் சாக்கடை சிறுபாலம் தடுப்புச் சுவர் சேதம் அடைந்து உள்ளது. பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்க வில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனை பயன்படுத்தி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் தடுப்புச் சுவர் சேதம் அடைந்தது தெரியாததால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. சேதம் அடைந்த சாக்கடை சிறு பாலத்தை சீரமைப்பதோடு, தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.