/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திராட்சை சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் மானியம் குளிர்பதன கிடங்கு அமைத்து ஏற்றுமதி ஆலோசனை

ADDED : ஜூலை 21, 2024 08:14 AM
கம்பம்: பன்னீர் திராட்சையை குளிர்பதன கிட்டங்கியில் வைத்து ஏற்றுமதி செய்யவும், சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் பெரும்பாலான கிராமங்களில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டியில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது. மாவட்டத்திலிருந்து வாழை, காய்கறி பயிர்கள் அதிகமாக ஏற்றுமதியாகிறது. பன்னீர் திராட்சைக்கு வெளிநாடுகளில் தேவை இருந்தும் விவசாயிகளால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. ஏற்றுமதி செய்ய விவசாயிகள் என்ன தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :
பன்னீர் திராட்சை பழ அறுவடையை காலை 6:30 மணியிலிருந்து 11:00 மணிக்குள் செய்து விட வேண்டும். பழக் கொத்தை அறுப்பதற்கு அதற்கென பிரத்யேகமாக உள்ள கத்தரியை பயன்படுத்த வேண்டும். பழக் கொத்தில் தடிமனான பகுதியில் அறுக்க வேண்டும். அவ்வாறு அறுப்பதால் பழத்தில் ஈரப்பதம் குறையாது. பழத்தின் எடையும் குறையாது.குளிர்பதன கிட்டங்கியில் 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வேண்டும். ஈரப்பதம் 80 முதல் 85 சதவீதம் இருக்க வேண்டும். பழத்தை அறுவடை செய்து டிரேயில் வைக்கும் போது, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க கூடாது.
இரண்டு மணி நேரத்திற்குள் குளிர்பதன கிட்டங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். மஹாராஷ்டிராவில் தோட்டங்களிலேயே ஒன்று முதல் 5 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கிகள் அமைத்துள்ளனர். தோட்டக்கலைத்துறை சார்பில் சிப்பம் கட்டும் அறை கட்ட ரூ.2 லட்சம் மானியம் தருகிறது.
விவசாயிகள் அதை பயன்படுத்தி சிறிய அளவில் குளிர்பதன அறைகள் கட்டலாம். இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பன்னீர் திராட்சையை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.என்றார்.