/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.54.40 லட்சம் மோசடி * ‛போலி பணி ஆணை' வழங்கி ஏமாற்றிய டிரைவர்கள் கைது
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.54.40 லட்சம் மோசடி * ‛போலி பணி ஆணை' வழங்கி ஏமாற்றிய டிரைவர்கள் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.54.40 லட்சம் மோசடி * ‛போலி பணி ஆணை' வழங்கி ஏமாற்றிய டிரைவர்கள் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.54.40 லட்சம் மோசடி * ‛போலி பணி ஆணை' வழங்கி ஏமாற்றிய டிரைவர்கள் கைது
ADDED : ஜூலை 31, 2024 10:06 PM

தேனி:தேனி ஊரக வளர்ச்சித்துறையில் கணினி ஆபரேட்டர், நகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி போலி பணி ஆணை வழங்கி ரூ.54.40 லட்சம் மோசடி செய்த பெரியகுளம், தென்கரை டிரைவர்கள் பொன்ஆண்டவர் செல்லம் 31, அவரது மூத்த சகோதரர் பொன் சண்முகநாதன் 34, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தேனி நான்கு குழாய் தெரு அய்யனார் 36. மினரல் வாட்டர் தொழில் செய்கிறார். இவரது மனைவி ஆர்த்தி 33, பட்டதாரி. 2021ல் தேனி ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் குடிநீர் கேன் சப்ளை செய்ய அய்யனார் சென்றார். இவருக்கும், அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்த கைதான பொன் ஆண்டவர் செல்லத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது.
எங்களுக்கு பல அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தெரியும். பலருக்கு அரசுப்பணி வாங்கி தந்துள்ளோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் ஆர்த்திக்கு ஊரக வளர்ச்சித்துறையில் கணினி ஆப்ரேட்டர் வேலையும், அய்யனாருக்கு தேனி நகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலையும் வாங்கித் தருவதாக பொன் ஆண்டவர் செல்லம், அவரது சகோதரர் பொன் சண்முகநாதன் ஆகியோர் கூறினர். இதனை நம்பிய அய்யனார் வங்கிக் கணக்கு மூலம் ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்து 800 அனுப்பினர்.
இப்பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும், ‛ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனரின் கடிதம் 2022 ஜன., 4 தேதியிட்ட போலி பணி ஆணையை வழங்கினர். இதனையும் நம்பிய தம்பதி, தனது உறவினர்கள் ஐந்து பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதற்காக ரூ.36.80 லட்சம் என, மொத்தம் ரூ.54 லட்சத்து 40 ஆயிரத்து 800 ஐ, டிரைவர்களிடம் வழங்கினர்.
பின் பொன் ஆண்டவர் செல்லம், ‛தலைமை செயலகத்தில் இருந்து சுகுமார்' என்பவரை பேசவைத்து நம்ப வைத்துள்ளார். அதன்பின் அய்யனாரின் மனைவி ஆர்த்திக்காக வழங்கப்பட்ட பணி ஆணையை அரசு அலுவலர்களிடம் காண்பித்த போது, அது போலியான பணி ஆணை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி பணத்தை திருப்பிக்கேட்ட போது, இருவரும் காலம் தாழ்த்தி மோசடி செய்தனர்.
பாதிக்கப்பட்ட தம்பதி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ.,க்கள் லதா, பாஸ்கரன் ஆகியோர் பொன் ஆண்டவர் செல்லம், பொன்சண்முகநாதன் மீது மோசடி வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.