/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தட்டம்மை பரவலால் மூடிய பள்ளிகள் இன்று திறப்பு
/
தட்டம்மை பரவலால் மூடிய பள்ளிகள் இன்று திறப்பு
ADDED : ஆக 27, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, : மூணாறில் மாணவர்களுக்கு இடையே தட்டம்மை பரவியதால் மூடப்பட்ட மூன்று பள்ளிகள் இன்று (ஆக.27) திறக்கப்படுகின்றன.
பழைய மூணாறில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, ஆங்கிலம், தமிழ் ஆரம்ப பள்ளி, உயர் நிலை பள்ளி ஆகியவற்றில் படிக்கும் சில மாணவர்களுக்கு தட்டம்மை அறிகுறி தென்பட்டது.
சித்திராபுரம் குடும்ப சுகாதார மையத்தைச் சேர்ந்த சுகாதாரதுறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தினர்.
அதில் 26 பேருக்கு தட்டம்மை நோய் கண்டறியப்பட்டதால், சுகாதார துறையினரின் அறிவுறுத்தப்படி மூன்று பள்ளிகளும் ஆக.20ல் மூடப்பட்டன. தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்ததால் பள்ளிகள் இன்று(ஆக. 27) திறக்கப்படுகின்றன.

