/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு
/
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு
ADDED : ஜூன் 10, 2024 05:53 AM
தேனி, : தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகள் ஏப்ரலில் கோடை விடுமுறை விடப்பட்டது. பள்ளிகள் மீண்டும் ஜூன் 4ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விடுமுறையில் அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் கட்டடங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள கல்வித்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர பயன்படுத்தப்படும் பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிாரிகள் தெரிவித்தனர்.