ADDED : மே 10, 2024 05:32 AM
தேனி: தேனி மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கோடை மழை கொட்டி தீர்த்தது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. தேனியில் மாலை 6:00 மணிக்கு மேல் பலத்த காற்று வீச துவங்கியது. தொடர்ந்து மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் வீரபாண்டி திருவிழாவிற்கு வந்த பக்தர்கள், மழையில் நனைந்தவாறு செல்லும் நிலை ஏற்பட்டது. ரோட்டோர பள்ளங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.
பெரியகுளம்: நேற்று மாலை 6:00 மணிக்கு காற்று வீசியது. மாலை 6:35 மணிக்கு சாரல் மழையாக துவங்கி அடுத்த 10 நிமிடத்தில் கனமழை பெய்தது. இதனால் வெப்பக்காற்று விலகி குளிர்ந்த காற்று வீசியது. கனமழை பெய்ய துவங்கியவுடன் மின்தடை ஏற்பட்டது. அதே நேரத்தில் 10 கி.மீ., தொலைவில் சில்வார்பட்டி, தேவதானப்பட்டி பகுதிகளில் பலத்த காற்று மட்டும் வீசியது.