/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
யானையை பார்த்து கீழே விழுந்து காயம்
/
யானையை பார்த்து கீழே விழுந்து காயம்
ADDED : மே 21, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் ஐ.டி.டி., பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் 27. இவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூணாறில் இருந்து ஐ.டி.டி.,யை நோக்கி டூவீலரில் சென்றார். வீட்டின் அருகே சென்ற போது ரோட்டில் எதிரே படையப்பா ஆண் காட்டு யானை வந்தது.
அதனை சற்றும் எதிர்பாராத ராஜேஷ்கண்ணன் அதிர்ச்சியில் டூவீலரில் இருந்து கீழே விழுந்தார். அதில் சிறிய காயங்கள் ஏற்பட்டபோதும் ஓடி உயிர் தப்பினார். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக படையப்பா ஐ.டி.டி., பகுதியில் முகாமிட்டு, அதன் அருகில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கிற்கு தீவனத்தை தேடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

