/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனித, வன விலங்கு மோதல் குறித்து கருத்தரங்கம்
/
மனித, வன விலங்கு மோதல் குறித்து கருத்தரங்கம்
ADDED : மார் 22, 2024 05:30 AM
மூணாறு: மூணாறில் உலக வன தினத்தை முன்னிட்டு நேற்று சுற்றுலா வழிகாட்டிகள், டிரைவர்கள் ஆகியோருக்கு வனத்துறை சார்பில் கருத்தரங்கம்  நடந்தது.
மூணாறு பகுதியில் சமீபகாலமாக மனித, வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாதத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள், 10 க்கும் மேற்பட்ட கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தின. கடந்த இரண்டு மாதங்களில் காட்டு யானை தாக்கி இருவர் இறந்தனர்.
இந்நிலையில் உலக வன தினத்தை முன்னிட்டு நேற்று சுற்றுலா வழிகாட்டிகள், கார், ஆட்டோ ஆகியவற்றின் டிரைவர்கள் ஆகியோருக்கு மனித, வனவிலங்கு மோதல் தொடர்பாக ஒரு நாள் கருத்தரங்கம்  வனத்துறை சார்பில் நடந்தது. மூணாறு வனத்துறை அதிகாரி பிஜூ, பெட்டிமுடி வனத்துறை அதிகாரி அபிலாஷ், வனவிலங்கு தடுப்பு பிரிவு அதிகாரி ஜெயன் உள்பட சுற்றுலா வழிகாட்டிகள், டிரைவர்கள் ஆகியோர் ஏராளமாக பங்கேற்றனர்.

