/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வயநாட்டுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
/
வயநாட்டுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ADDED : ஆக 07, 2024 07:41 AM

மூணாறு, : வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடுக்கி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளா, வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்த நிலையில் மீட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இடுக்கி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கம்பளி, பெட்ஷீட், கம்பளி ஆடைகள், பாத்திரங்கள், பாய்கள், கேஸ் அடுப்புகள், உணவு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவை வயநாட்டிற்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன. இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி கொடி அசைத்து லாரியை அனுப்பி வைத்தார். இடுக்கி சப் கலெக்டர் அருண் எஸ். நாயர், உதவி கலெக்டர்கள் ராஜூ, அனில்பிலிப் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.