/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறைதீர் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற வேண்டும்
/
குறைதீர் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற வேண்டும்
குறைதீர் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற வேண்டும்
குறைதீர் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற வேண்டும்
ADDED : மார் 05, 2025 06:43 AM
தேனி: மாவட்ட அதிகாரிகள் திங்கள் தோறும் நடைபெறும் குறைதீர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்தோறும் காலை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்திற்கு முன் மாவட்ட நிலையிலான அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால், இந்த கூட்டத்தில் சில அதிகாரிகள் பங்கேற்காமல், துறையில் பணிபுரியும் வேறு அலுவலர்களை அனுப்பி வந்தனர்.
ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட நிலையிலான அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.
நேற்று நடந்த கூட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் பங்கேற்றனர்.
பங்கேற்காதவர்கள் ஆன்லைன் மூலம் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவும் அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.