/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோக்அதாலத்தில் 1689 வழக்குகளில் ரூ.17.80 கோடிக்கு தீர்வு
/
லோக்அதாலத்தில் 1689 வழக்குகளில் ரூ.17.80 கோடிக்கு தீர்வு
லோக்அதாலத்தில் 1689 வழக்குகளில் ரூ.17.80 கோடிக்கு தீர்வு
லோக்அதாலத்தில் 1689 வழக்குகளில் ரூ.17.80 கோடிக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 12:20 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று லோக் அதாலத் நடந்தது. இதில் 1689 வழக்குகளுக்கு ரூ. 17.80 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடந்தது. தேனியில் முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். தலைமைக் குற்றவியல் நீதித்துறை நீதிபதி கவிதா, குடும்பநல நீதிபதி சரவணன், அமர்வு நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயமணி பங்கேற்றனர்.
பெரியகுளத்தில் அமர்வு நீதிபதி சமீனா முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் கமலநாதன் பங்கேற்றனர்.
உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், ராமநாதன் பங்கேற்றனர். ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன் பங்கேற்றார். போடியில் சார்பு நீதிபதி சையதுசுலைமான் உசேன், நீதித்துறை நடுவர் ரமேஷ் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள், வங்கிகளில் வாராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 1689 வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்குகளுக்கு ரூ.17.80 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.