/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில் பாதை மூடியதை கண்டித்து கடமலைக்குண்டில் கடை அடைப்பு
/
கோயில் பாதை மூடியதை கண்டித்து கடமலைக்குண்டில் கடை அடைப்பு
கோயில் பாதை மூடியதை கண்டித்து கடமலைக்குண்டில் கடை அடைப்பு
கோயில் பாதை மூடியதை கண்டித்து கடமலைக்குண்டில் கடை அடைப்பு
ADDED : ஆக 17, 2024 01:27 AM

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டில் கோயிலுக்கு செல்லும் பாதையில் இருக்கும் முள்வேலியை அகற்றக்கோரி வியாபாரிகள் சங்கத்தினர் பொதுமக்கள் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தினர்.
கடமலைக்குண்டில் மூலவகை ஆற்றங்கரையில் உள்ளது பழமையான ஈஸ்வரன் கோயில். இக்கோயிலுக்கு மெயின்ரோட்டில் இருந்து பாதை வசதி உள்ளது.
இந்த பாதையை கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த இரு வாரத்திற்கு முன் கடமலைக்குண்டை சேர்ந்த தனிநபர் கோயிலுக்கு செல்லும் பாதையை முள் வேலி மூலம் அடைத்து விட்டார்.
இது குறித்து கடமலைக்குண்டு கிராம கமிட்டி சார்பில் சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது கோவிலுக்கான பாதை தன்னுடைய பட்டா நிலத்தில் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் முள்வேலியை அகற்ற மறுத்துவிட்டார்.
இது குறித்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வருவாய்த்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீரவில்லை. கோயில் பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து கடமலைக்குண்டு கிராம மக்கள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடமலைக்குண்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பாதைக்கான முள்வேலி அகற்றப்படவில்லை எனில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெறும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், மற்றும் போலீசார் கொண்ட குழு பாதையை மறித்த தனிநபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முள் வேலியை அகற்றினர். இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் கடமலைக்குண்டில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு, போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.