/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆக.10 ல் துவக்கம்
/
சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆக.10 ல் துவக்கம்
ADDED : ஜூலை 13, 2024 09:48 PM
போடி:தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆக.,10 ல் துவங்குகிறது.
தமிழக அளவில் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு (டைப்ரைட்டிங்), சுருக்கெழுத்து தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதி, எளிதில் கட் ஆப் மதிப்பெண்கள் மூலம் வேலை வாய்ப்பு பெறலாம் என்பதால் அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கான சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு ஆக.,10, 11, இளநிலை, முதுநிலை ஆக., 24, 25, வணிகவியல் அக்கவுண்டன்சி இளநிலை, முதுநிலை தேர்வு ஆக., 23, தட்டச்சு (டைப்ரைட்டிங்) இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர் வேகம் ஆக., 31, செப். 1ல் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.