ADDED : ஏப் 01, 2024 11:59 PM

மூணாறு : மூணாறு பகுதியில் சோலை மந்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
குரங்கு இனத்தைச் சேர்ந்த சோலை மந்திகள் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடர்ந்த வனம், மழை காடுகள் ஆகியவற்றில் கூடுதலாக காணப்படும். அதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் 'லைன் டெல்ட் மக்காக்' என அழைக்கப்படுகிறது.
அவை பழங்களை விரும்பி உண்ணும் என்பதால் அடர்ந்த வனம், பசுமையான மழை காடுகள் ஆகியவற்றை தேர்வு செய்து வசிக்கும். கேரள, தமிழக எல்லையான சின்னாரில் வன உயிரின சரணாலயத்தில் அதிகமாக காணப்பட்டவை தற்போது மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட், 8ம் மைல், தலையார் எஸ்டேட் உள்பட பல பகுதிகளில் அதிகம் நடமாடுகின்றன. அதன் இறைச்சி மருத்துவ குணம் கொண்டதாக கூறி வேட்டையாடுவதாலும், வனம், காடுகள் அழிவதாலும் சோலைமந்திகள் அழிவில் விளிம்பில் உள்ளதாக தெரியவந்தது குறிப்பிடதக்கது.

