/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது
/
மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது
ADDED : ஜூன் 27, 2024 05:06 AM

போடி : போடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வசிப்பவர் பேச்சியம்மாள் 25.
பழக்கடை வைத்துள்ளார். இவரது முதல் கணவர் முத்துகிருஷ்ணன் 35. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியைச் சேர்ந்த அப்துல் மானிப் 38. என்பவர் போடிக்கு வந்து பழங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இதில் பேச்சியம்மாள், அப்துல் மானிப் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். அப்துல் மானிப் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பேச்சியம்மாள் கோபித்துக் கொண்டு தனது தாயார் கலா 50. வீட்டிற்கு சென்றுள்ளார். அப்துல் மானிப் மாமியார் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார். மாமியார் கலா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் மானிப் மாமியாரை தகாத வார்த்தையால் பேசி, அரிவாளால் தோள் பட்டை, கையில் வெட்டி காயம் ஏற்படுத்தி உள்ளார். கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். மனைவி புகாரில் போடி டவுன் போலீசார் அப்துல் மானிப்யை கைது செய்து விசாரிக்கின்றனர்.