/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சோத்துப்பாறையில் 86 மி.மீ., மழை பதிவு
/
சோத்துப்பாறையில் 86 மி.மீ., மழை பதிவு
ADDED : ஆக 13, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. மதியம் 2:00 மணிக்கு மேல் கால நிலை மாறி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. நள்ளிரவு வரை மழை தொடர்ந்தது. மாவட்டத்தில்பதிவான மழை விபரம்:
சோத்துப்பாறை அணையில் 86 மி.மீ., ஆண்டிப்பட்டி 50 மி.மீ., வைகை அணையில் 49 மி.மீ., பெரியகுளம் 46 மி.மீ., மஞ்சளாறு அணையில்35 மி.மீ., வீரபாண்டியில் 26.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 16.6 மி.மீ., பெரியாறு அணையில் 11 மி.மீ., சண்முகாநதி அணையில் 8.8 மி.மீ., கூடலுாரில் 8.2 மி.மீ., போடியில் 7.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 7.4 மி.மீ., தேக்கடியில் 4.2 மி.மீ., என மொத்தம் 356 மி.மீ., மழை பதிவானது.

