/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு கலை கல்லுாரியில் சிறப்பு சேர்க்கை முகாம்
/
அரசு கலை கல்லுாரியில் சிறப்பு சேர்க்கை முகாம்
ADDED : ஆக 13, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி அரசு கலை கல்லுாரியில் நாளை (ஆக.,14) சிறப்பு சேர்க்கை முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 முடித்து இதுவரை உயர்கல்வி சேராத மாணவர்களை பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பள்ளிகல்வித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கல்லுாரிகளில் சேராத மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் முகாமில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க வரும் மாணவர்கள் ஆதார், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 5 புகைப்படம் எடுத்த வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

