/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்ததால் இறப்பு
/
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்ததால் இறப்பு
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்ததால் இறப்பு
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்ததால் இறப்பு
ADDED : மே 10, 2024 05:26 AM

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதியில் புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளன. மழை இன்மையால் தற்போது மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
நேற்று அதிகாலை மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளது.
அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் சுற்றி வளைத்து புள்ளிமானை துரத்தி கடித்தது.
தோட்டப்பகுதி வழியாக மலைப்பகுதிக்கு புள்ளிமான் தப்பிச்செல்ல முயன்றது. தெரு நாய்கள் புள்ளிமானின் கால், முகம் உள்ளிட்ட இடங்களில் கடித்து ரத்த காயங்கள் ஏற்படுத்தியது.
இதனால் ஓட முடியாமல் மேலப்பட்டி சுடுகாடு அருகே உள்ள தோட்டத்தில் சென்று படுத்துவிட்டது.
அங்கிருந்தவர்கள் நாய்களை விரட்டி விட்டு கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் அதிக ரத்தம் வெளியேறி புள்ளிமான் அந்த இடத்திலேயே இறந்தது.
தாமதமாக வந்த வனத்துறையினர் புள்ளிமானின் உடலை அதே இடத்தில் பரிசோதனை செய்து புதைத்தனர்.