/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டீ குடிக்கும் போது கத்தியால் குத்தி காயம்
/
டீ குடிக்கும் போது கத்தியால் குத்தி காயம்
ADDED : மே 10, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் 24. இவரது நண்பர்கள் சந்தானகிருஷ்ணன் 24, தினேஷ் 23 மாரி 24. சீதாபதி 24. ஆகியோர் வடுகபட்டி பைபாஸ் ரோட்டில் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது டூவீலரில் வந்த இருவர், பிரபாகரனிடம்,' நீ தானே எங்கூட பிரச்னை செய்தவர்' என கூறி கத்தியால் பிரபாகரன் நெற்றியில் குத்தி காயப்படுத்தினர். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரபாகரன் அனுப்பி வைக்கப்பட்டார்.
அடையாளம் தெரிந்த, பெயர், விலாசம் தெரியாத இருவரை தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.