/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில 'கிக் பாக்சிங்' போட்டி: 6 தங்கம் 31 பதக்கம் பெற்று மாணவர்கள் சாதனை
/
மாநில 'கிக் பாக்சிங்' போட்டி: 6 தங்கம் 31 பதக்கம் பெற்று மாணவர்கள் சாதனை
மாநில 'கிக் பாக்சிங்' போட்டி: 6 தங்கம் 31 பதக்கம் பெற்று மாணவர்கள் சாதனை
மாநில 'கிக் பாக்சிங்' போட்டி: 6 தங்கம் 31 பதக்கம் பெற்று மாணவர்கள் சாதனை
ADDED : மே 09, 2024 05:52 AM

ஆண்டிபட்டி: செங்கல்பட்டில் நடந்த மாநில அளவிலான 'கிக் பாக்ஸிங்' போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 தங்கம் உள்பட 31 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு பல்கலை மைதானத்தில் மே 3, 4, 5 ல் தமிழ்நாடு அமச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான போட்டி நடந்தது.
இதில் தேனி மாவட்ட அமச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 51 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் தங்கம், 8 பேர் வெள்ளி, 17 பேர் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அமச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் தேனி மாவட்ட செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:
சப் ஜூனியர் பிரிவில் மாநில அளவில் தங்க பதக்கம் வென்ற மாணவர்கள் திரிதேவ், சம்யுக்தா ஆகியோர் புனேயில் சத்ரபதி சிவாஜி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஜூனியர் பிரிவு மாணவி ரஞ்சிதா மேற்கு வங்கம் சிலுகுரியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற மாணவர்கள் ஸ்ரீ சபரிஸ், விஸ்வேஸ்வரன், மாரிமுத்து ஆகியோர் கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். என்றார்.
பதக்கம் வென்ற மாணவர்களை அசோசியேசன் தேனி மாவட்ட தலைவர் மகாராஜன், பயிற்சியாளர் துரைமுருகன், துணை பயிற்சியாளர்கள் நவீன், ஜெயவேல், ஆனந்த வேல்முருகன் ஆகியோர் பாராட்டினர்.