ADDED : ஜூலை 30, 2026 05:44 PM
தேனி, ஜூலை 31–
தேனியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14,17,19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ் போட்டி ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடந்தது.
மாணவர்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் வென்ற அணிகள்: 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் டி.எம்.எச்.என்.யூ., பள்ளி, 17 வயது பிரிவில் என்.ஏ.கொண்டுராஜா உயர்நிலைப் பள்ளி, 19 வயது பிரிவில் டி.எம்.எச்.என்.யூ., பள்ளிகள் வென்றன.
இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த அணிகள்: 14 வயது பிரிவில் டி.எம்.எச்.என்.யூ., பள்ளி, 17 வயது பிரிவில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி, 19 வயது பிரிவில் டி.எம்.எச்.என்.யூ., பள்ளி வென்றன.
மாணவிகள் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடம் வென்ற அணிகள்: 14 வயது பிரிவில் மேரி மாதா மெட்ரிக் பள்ளி, 17 வயது பிரிவில் டி.எம்.எச்.என்.யூ., பள்ளி, 19 வயது பிரிவில் டி.எம்.எச்.என்.யூ., முத்துதேவன்பட்டி பள்ளி வென்றன.
