ADDED : மே 24, 2024 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிக்கப்பட்ட ரோடு பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு நடத்தினார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2023-2024ம் நிதியாண்டில்ரூ.90 கோடிமதிப்பில் ரோடு அமைக்கும் பணி, அகலப்படுத்தும் பணி, மேம்படுத்தும் பணி என 63 பணிகள் நடந்தன.இப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு மற்றும் உட்தணிக்கை நடந்துவருகிறது.இதில் தேனி சப்டிவிஷனில் வெங்கடாசலபுரம் -காட்டுநாயக்கன்பட்டியில் நடந்த ரோடு அகலப்படுத்தும் பணிகளை திருச்சி நபார்டு, கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, மதுரை நபார்டு கிராம சாலைகள்கோட்டப்பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தனர்.
தேனி கோட்டபொறியாளர் சுவாமிநாதன், உதவி கோட்டப்பொறியாளர்கள்,உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.