நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கம்பம் புதுப்பட்டி கோசேந்திர ஓடை எல்.எப்., ரோடு ஜெயராஜ் 65. இவர் கம்பத்தை சேர்ந்த மிளகு வியாபாரி காம்ப்ளக்ஸில் 2 ஆண்டுகளாக வாட்ச்மேன் வேலை செய்தார். இவரது மகன் உதயகுமார் டிரைவர் வேலை செய்தார்.
இவரும் காமயக் கவுண்டன்பட்டியை சேர்ந்த பெண்ணும் காதலித்தனர். தற்போது அப்பெண் உதயக்குமாரை காதலிக்க மறுத்தார். உதயகுமார் அப்பெண்ணை அலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்தார். பெண்ணின் தாயார் ஜெயராஜின் வீட்டிற்கு வந்து திட்டி சென்றார். இதனால் ஜெயராஜ், தனது மகனை கண்டித்தார்.
அவர் கேட்காததால் விரக்தியில் தான் வாட்ச்மேன் பணி செய்த காம்ப்ளக்ஸில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.