நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு; மூணாறில் குளிர் காலம் கடந்த நவம்பரில் துவங்கியும் ஜனவரி வரை அவ்வப்போது மழை பெய்ததால் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. ஆண்டு தோறும் குளிர் காலங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் காலையில் வெப்பம் மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து உறை பனி ஏற்படும். இந்தாண்டு அதற்கு வாய்ப்பு இன்றி போனது.
கடந்த பிப்ரவரி முதல் வெயில் சுட்டெரித்ததால் பகலில் வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. வெப்பத்தின் தாக்கம் இரவிலும் இருந்ததால் சில சுற்றுலா பயணிகள் மின் விசிறி வசதி கொண்ட அறைகளை தேட நேரிட்டது.
மக்கள் பெரும்பாலானோர் மின்விசிறியை பயன்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு இரண்டு கட்டங்களாக கோடை மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியதால் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

