/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முகாம் 30 நாட்கள் நடத்த திட்டம்
/
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முகாம் 30 நாட்கள் நடத்த திட்டம்
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முகாம் 30 நாட்கள் நடத்த திட்டம்
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முகாம் 30 நாட்கள் நடத்த திட்டம்
ADDED : ஏப் 25, 2024 05:15 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள பண்ணைகள், தனிநபர்களால் வளர்க்கப்படும் மூன்று மாதத்திற்கு மேல் உள்ள சினையற்ற பன்றிகளுக்கு நேற்று ஏப்., 24 முதல் மே 23 வரை 30 நாட்களுக்கு பன்றிக் காய்சசல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கியது.
மாவட்டத்தில் உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் பண்ணைகளில் வெண்பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. பிற பகுதிகளில் குறைந்த அளவிலான பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.
இவைகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்துவதால் பன்றிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கோடை காலத்தில் பன்றிகளை பராமரிக்கும் முறை குறித்து பண்ணையாளர்கள் அறிந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா கூறியதாவது: பன்றி வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பன்றி காய்ச்சல் நோய் ஒரு விதமான வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது.
மனிதர்கள், பிற உயிரினங்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இல்லை. எனினும் பன்றிகள் மூலம் பரவி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ளதால் மாவட்டத்தில் வளர்க்கப்படும் பன்றிகளை காக்கும் வண்ணம் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துவக்கி உள்ளோம்.
கால்நடை துறை டாக்டர் குழுவினர் பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.காய்ச்சல் பன்றிகளை பாதிக்கக்கூடிய ஒன்று. இந்நோய் (கிளாசிக்கல் ஸ்வைன் ப்ளூ) என்ற ஒரு கொடிய வைரஸ் தொற்றாகும். பாதிப்பு ஏற்பட்டால் அதிக காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உட்கொள்ளாத நிலை ஆகியவை உடனடியாக ஏற்படும் அறிகுறிகளாகும். சில சமயங்களில் பன்றிகள் திடீரென உயிரிழக்க நேரிடும்.
இந்நோயானது நோய் பாதிப்பு ஏற்பட்ட பன்றிகளின் உமிழ்நீர், மூக்கிலிருந்து வடியும் நீர், சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் நேரடியாக நோயில்லாத பன்றிகளுக்கு பரவிவிடும். நோய் தாக்கிய பன்றிகளின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதோடு, உயிரிழப்பின் சதவீதம் மிகவும் அதிகரிக்கும்.
இதற்கு சிகிச்சை முறைகள் எதுவம் பயனளிக்காது. தடுப்பூசி செலுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும்.இதற்கு பன்றிகள் வளர்ப்போர், பண்ணை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்றார்.

