/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழக தேர்தல்: கேரளா எல்லையில் மதுக்கடைகள் மூடல்
/
தமிழக தேர்தல்: கேரளா எல்லையில் மதுக்கடைகள் மூடல்
ADDED : ஏப் 18, 2024 06:00 AM
மூணாறு: தமிழகத்தில் நாளை (ஏப்.19) லோக்சபா தேர்தல் நடப்பதால், கேரளாவில் எல்லையோர மாவட்டங்களில் சில தாலுகாக்களில் நேற்று மாலை 6:00 மணி முதல் மூன்று நாட்களுக்கு மதுகடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடக்கிறது. தவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் ஏப்.19ல் இடைத்தேர்தல் நடக்கிறது.அதனால் கேரளாவில் எல்லையோர மாவட்டங்களில் சில தாலுகாக்களில் மதுபான கடை, பார் உள்ளிட்டவைகளை மூடுமாறு இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைத்தது.
அதன்படி கேரள அரசு எல்லையோர மாவட்டங்களில் சில தாலுகாக்களில் மதுபான கடைகளை மூடுமாறு உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு கடைகள் மூடப்பட்டன.
ஏப்.20 மாலை 6:00 மணிக்கு கடைகள் திறக்கப்படும். மூணாறில் உள்ள இரண்டு அரசு மதுபான கடைகள், தனியார் பார்கள் ஆகியவை மூடப்பட்டன.

